நேற்று நடைபெற்ற 18,000 பேர் பங்கேற்ற எதிர்க்கட்சிப் பேரணி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் பதவியை ஒரு போதும் அசைக்காது என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம், அல்லது பொதுத் தேர்தல், இவ்விரண்டு மட்டுமே ஒரு பிரதமரை வீழ்த்தும் என்றும், இதுவரை ஒருவரும் அத்தகையத் துணிச்சலைக் காட்டவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
"ஷெரட்டன் நகர்வு" போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது எனவும் எச்சரித்த ஃபாமி, அரசின் அறிவிப்புகள் 24 மணி நேரத்திற்குள் மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.








