Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

Share:

ஸ்குவாஷ் மைதானம் ஒன்றைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில், கூட்டரசுப் பிரதேச சட்ட அமைப்பின் தலைமை செயலதிகாரி ஒருவரை, நேற்று இரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுமார் 40 வயதுடைய அந்த சந்தேக நபர், ஸ்குவாஷ் மைதானம் கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

அவர் நேற்று மாலை சுமார் 7.20 மணியளவில் புக்கிட் ஜலீல் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி, ஒப்பந்ததாரரிடமிருந்து 1 லட்சம் ரிங்கிட் தொகையை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படுகிறது.

மேலும், அந்த சந்தேகநபர் முன்னதாக ஒப்பந்ததாரரின் கோரிக்கை பணப்பரிவர்த்தனைகளை அனுமதிக்க, 1 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக SPRM தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.

Related News