Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களுக்கு உதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களுக்கு உதவி

ஜோகூர் பாரு, ஜூலை.09-

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 22 பேரை ஏற்றி வந்த வேன் டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் காயமுற்ற நான்கு மாணவர்களில் இருவர் இன்னமும் ஜோகூர் பாரு ஹோஸ்பிடல் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தென் திசையிலுள்ள பண்டார் துன் ஹுசேன் ஓன் வெளியேறும் சாலையில் சிமெண்ட் டிரெய்லருடன் வேன் மோதிய சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

காயமுற்றவர்களில் தெப்ராவ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இரு மாணவிகளின் உடல் நிலையைக் கண்டறிய தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இரு மாணவர்களையும் நலம் விசாரித்ததுடன் உணவுப் பொருள் கூடைகளையும், கணிசமான நிதி உதவியையும் வழங்கி, தமது ஆதரவைப் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்களுக்கு உதவி | Thisaigal News