Nov 7, 2026
Thisaigal NewsYouTube

நஜிப் வீட்டுக் காவல் விவகார சர்ச்சைக்கு மத்தியில் நிகழ்ச்சியைத் தவிர்த்த அமைச்சர் அந்தோணி லோக்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப் வீட்டுக் காவல் விவகார சர்ச்சைக்கு மத்தியில் நிகழ்ச்சியைத் தவிர்த்த அமைச்சர் அந்தோணி லோக்

டாக்சி மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கலந்து கொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி நேரத்தில் ஏற்பட்ட இதர அலுவல் பணிகள் காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதாக ஜசெக சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் கூட, அவரது வருகை ரத்து செய்யப்பட்ட தகவல், நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சற்று முன்பே தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, அவருக்குப் பதிலாக சரவாக் வர்த்தக வாகன உரிம வாரியத்தின் தலைவர் மைக்கல் கோங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிதியுதவியை வழங்கினார்.

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் வீட்டுக் காவல் விவகாரம் தொடர்பாக அந்தோணி லோக்கின் அமைச்சர் பதவி விலகல் நிலைப்பாடு மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.

நஜிப் ரஸாக் வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்காகத் தனது இல்லத்தைச் சென்றடையும் தருணத்தில், தனது பதவி விலகல் அமலுக்கு வரும் என்று அந்தோணி லோக் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →