Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பிரதமரின் முன்னாள் செயலாளர் உட்பட இருவரின் விசாரணையில் தீவிர கவனம் செலுத்துவீர்: எஸ்பிஆர்எம் அதிகாரிகளுக்கு உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமரின் முன்னாள் செயலாளர் உட்பட இருவரின் விசாரணையில் தீவிர கவனம் செலுத்துவீர்: எஸ்பிஆர்எம் அதிகாரிகளுக்கு உத்தரவு

புத்ராஜெயா, நவம்பர்.29-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் மற்றும் வர்த்தக தரகர் ஆல்பெர்டா தே ஆகியோரின் விசாரணைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு தனது அதிகாரிகளுக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி உத்தரவிட்டுள்ளார்.

சபா சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணத்தை மீட்டெடுப்பதற்கு பிரதமரின் செயலாளருக்குத் தாம் லஞ்சம் கொடுத்ததாக வர்த்தகத் தரகர் ஆல்பெர்ட் தே கூறியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இருவரும் தற்போது எஸ்பிஆர்எம் பிடியில் உள்ளனர்.

லஞ்சம் கேட்பது, லஞ்சத்தைக் கொடுப்பது போன்ற குற்றங்களை உள்ளடக்கிய இந்த வழக்கு விசாரணை தற்போது எஸ்பிஆர்எம் சட்டம், 16 பிரிவின் கீழ் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

இந்த இரண்டு பிரபலங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணையும் ஒரு வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தமது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகள் அனைத்தும் நியாயமாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் இருக்கும் என்று அஸாம் பாக்கி மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்