Jan 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் இல்லத்தை பழுது பார்க்க 3.8 கோடி வெள்ளியை முகைதீன் செலவளித்தார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் இல்லத்தை பழுது பார்க்க 3.8 கோடி வெள்ளியை முகைதீன் செலவளித்தார்

Share:

நாட்டின் பிரதமர் இல்லமான ஸ்ரீ பெர்டானாவை பழுதுபார்க்க அப்போதைய பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் 3.8 கோடி வெள்ளியை செலவழித்தது நியாமானது என்று முகைதீனின் முன்னாள் அரசியல் உதவியாளர் ஒருவர் கூறுகிறார்.

முகைதீனின் தலைமை தனிச் செயலாளர் என்ற முறையில் தாம்தான் இந்த பழுதுப்பார்க்கும் விவகாரத்தில் நேரடியாக ஈடுபட்டதாக தமது முகநூலில் மர்சிகி முகமது தெரிவித்திருந்தார்.
ஸ்ரீ பெர்டானாவில் உள்ள முக்கிய பிரச்சனையான தண்ணீர் கசிவுகள், , கூரை, சுவர்கள் மற்றும் தரை போன்றவை கடுமையாக சேதமடைந்து இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

சமையலறையைப் பயன்படுத்த முடியாது. வயரிங் பிரச்சனைகள் இருந்தன. ஒரு பிரதமரின் அதிகாரத்துவ இல்லம், மிகவும் மோசமான நிலையில் இருந்தது. முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு பிறகு வேறு எந்தப் பிரதமரும் ஸ்ரீ பெர்டானாவில் தங்கவில்லை என்று மர்சிகி முகமது தெரிவித்துள்ளார்.

Related News