அம்னோவில் லஞ்ச ஊழல் புரையோடிவிட்டதாக அங்கலாய்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, அக்கட்சிக்கு தலைமையேற்று இருந்த 22 ஆண்டு காலத்தில் லஞ்சத்தை துடைத்தொழிப்பதில் எவ்வித பங்களிப்பும் வழங்கவில்லை என்று அம்னோவின் இளைஞர் பிரிவு நிரந்தரத் தலைவர் வான் அக்லி வான் ஹாஸ்ஸான் தெரிவித்துள்ளார்.
அம்னோவையும், அரசாங்கத்தையும் வழிநடத்தக்கூடிய உச்ச அதிகாரத்தை துன் மகாதீர் கொண்டு இருந்த போதிலும் கட்சியில் லஞ்ச ஊழல் தலைத்தூக்க தொடங்கிய அக்காலக்கட்டத்தில் அப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதில் எதையும் செய்யவில்லை என்று வான் அக்லி குறிப்பிட்டார்.
நாட்டின் தலைவராக பொறுப்பேற்று இருந்த காலத்தில் மலாய்க்காரர்களின் தாய்கட்சியான அம்னோவில் லஞ்சம் வேரூன்றத் தொடங்கிய போது, அதனை களையெடுப்பதில் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டீர்கள் என்று வான் அக்லி கேள்வி எழுப்பினார்.








