Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மதுபான விற்பனைத் தடை மீதான ஆய்வைத் தொடர தடை ஏதுமில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஈப்போ, ஜன.28-

பேரா மாநிலத்தில் மஞ்சோய் போன்ற முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதைப் போன்று முஸ்லிம்கள் அதிகமான வசிக்கின்ற இதர பகுதிகளில் அது போன்ற தடை விதிப்பது மீதான ஆய்வை தொடர்வதற்கு ஈப்போ மாநகர் மன்றத்திற்கு தடை ஏதுமில்லை என்று மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேசப் பரிந்துரை குறித்து ஈப்போ மாநகர் மன்றத்திடமிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆய்வில் இருந்து வரும் இந்த உத்தேசப் பரிந்துரையை மாநில ஊராட்சி மன்றத்திடம் தெரிவிப்பதற்கு முன்னதாக விதிமுறைகள் மீதான நடவடிக்கைக்குழு இதனை விரிவாக ஆராயும் என்று சாரானி முகமட் குறிப்பிட்டார்.

மதுபான தடை மீதான இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் உட்பட சில தரப்பினர் ஒரு விவாதப்பொருளாக மாற்றி வருவது குறித்து பேரா அரசாங்கம் கவலைக்கொள்வதாக சாரானி முகமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

பினாங்கு பாலத்தில் இரு கார்கள் மோதி விபத்து: பெண் படுகாயம்; கார் கவிழ்ந்தது

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஃபோர்முலா 1 பந்தயம் மூலம் மலேசியாவுக்கு 950 மில்லியன் ரிங்கிட் வருவாய் - அமைச்சு தகவல்

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

ஐரின் சோஃபியா மரண வழக்கு: 16 வயது மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது