Sep 23, 2026
Thisaigal NewsYouTube
சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

Share:

சரவாக் மாநிலத்தின் பல பகுதிகளில் புகைமூட்டம் மோசமடைந்துள்ள நிலையில், 5 மாவட்டங்களில் காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவை எட்டியுள்ளது.

இந்த நிலைக்கு இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயே காரணம் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, செரியான் மாவட்டத்தில் அதிகபட்சமாக காற்றுத் தரக் குறியீடு 171 ஆகப் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கூச்சிங் மற்றும் சமரஹான் ஆகிய பகுதிகளில் தலா 154, ஸ்ரீ அமான் பகுதியில் 139, பிந்துலு பகுதியில் 124 எனப் பதிவாகியுள்ளது.

காற்றுத் தரக் குறியீடு 101 முதல் 200 வரை பதிவானால், அது “ஆரோக்கியமற்ற நிலை” என வகைப்படுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கலிமந்தான் பகுதியில் தற்போது 643 காட்டுத்தீ பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கலிமந்தான் பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் உருவாகும் புகை, காற்றின் மூலம் சரவாக் பகுதிகளுக்கும் பரவி வருவதால், அங்கு புகைமூட்டத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்