Sep 23, 2026
Thisaigal NewsYouTube
அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை
தற்போதைய செய்திகள்

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

Share:

கெடா மாநிலம் அலோர் ஸ்டாரில் கடத்தப்பட்ட இருவரை மீட்கும் நடவடிக்கையின் போது, போலீசாருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் வெளிநாட்டினர் என நம்பப்படும் இரு சந்தேக நபர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலாகா பத்தா, தாமான் அமிரா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கடத்தப்பட்ட இருவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கி, சந்தேக நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோக் எம்.குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து பெரெட்டா ரக துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் நீளமான கத்தி ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 70 வயதுடைய வெளிநாட்டு ஆண் மற்றும் 30 வயதுடைய வெளிநாட்டு பெண் ஆகியோர் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இருவரின் கண்களும் கட்டப்பட்டிருந்ததுடன், கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கெடா, பினாங்கு மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் உள்ளூர் ஆடவர் ஒருவர் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மற்றும் அதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்