Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா
தற்போதைய செய்திகள்

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

Share:

எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் பெர்சாமா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாக, தனது ‘யாங் பெர்ஹெந்தி மந்திரி’ பாட்காஸ்டின் சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அடுத்த மலாக்கா மாநிலத் தேர்தல் அதிகபட்சமாக 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் நடைபெற வேண்டும். எனினும், மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவூப் யூசோப், தேர்தலானது வரும் செப்டம்பர் மாதத்திலேயே நடைபெற வாய்ப்புள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனால் தேர்தலுக்கான தயாரிப்புகளை பெர்சாமா கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெர்சாமா கட்சி சார்பில் போட்டியிட்ட 15 வேட்பாளர்களும் தோல்வியடைந்ததுடன், அனைவரும் தங்களது தேர்தல் வைப்புத் தொகையையும் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்