முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, கடந்த ஜனவரி மாதம் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்த அதிர்ச்சித் தகவலை இன்று பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அவரது வலது கால் கட்டுப்பாட்டை இழந்ததால், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதோடு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான வலியால் துடித்த அவர், உடனடியாக தேசிய இருதய சிகிச்சை கழகமான IJN- னில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். "அந்த வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது" என்று குறிப்பிட்டுள்ள அவர், பல மாத சிகிச்சைக்குப் பிறகு தற்போது மெல்ல தேறி வருவதாகத் தெரிவித்துள்ளார். 100 வயதாகும் மூத்த தலைவரின் இந்த உடல்நலப் பாதிப்பு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.








