டிலி, செப்டம்பர்.24-
திமோர்-லெஸ்டேவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது இரண்டாவது நாளை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையுடன் தொடங்கினார்.
நாளுமன்றத்தில் உரையாற்ற வந்த அன்வாரை அந்நாட்டு தேசிய நாடாளுமன்றத் தலைவர் மரியா ஃபெர்னண்டா லே வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, அரச மாளிகையில், திமோர்-லெஸ்டே பிரதமர் Kay Rala Xanana Gusmão-வைச் சந்தித்த அன்வார், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அதே வேளையில், அரச மாளிகையில், அன்வாருக்கு, திமோர்-லெஸ்டேவின் உயரிய விருதான கிராண்ட் காலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கிராண்ட் காலர் என்பது திமோர்-லெஸ்டேவில் சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் மிக உயரிய கௌரவ விருது ஆகும்.








