Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பெட்டிஷன் தாக்கல் செய்யப் போகிறார்களா?
தற்போதைய செய்திகள்

பெட்டிஷன் தாக்கல் செய்யப் போகிறார்களா?

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் தோல்வி அடைந்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க பெட்டிஷன் போடப்படும் என்று அந்தக் கூட்டணி அறிவித்து இருப்பது விசித்திரமாக உள்ளது என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வர்ணித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனலின் மூத்த தலைவர் ஒருவரிடமிருந்து வந்துள்ள இந்த வார்த்தையானது, இந்த இடைத் தேர்தலில் தாங்கள் தோல்வி அடையப் போகிறோம் என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்துள்ளார் என்பது மட்டுமல்ல, மிகவும் விசித்திரமாகவும் உள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டி எந்த கட்சி வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.

ஆனால், வரும் சனிக்கிழமை நடைபெறும் இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் தோல்வி அடைந்தால் அந்த தேர்தல் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்டிஷன் போடப்படும் என்று அதன் மூத்தத் தலைவர் கூறியிருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து