பினாங்கு மாநிலத்தின் கட்டுமானத்திற்கான செலவைக் குறைக்கும் நோக்கில் மூடப்பட்டக் குவாரிகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
வீட்டு வசதி, சுற்றுச் சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் , எஸ் சுந்தரஜு தெரிவிக்கயில், குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமானச் எலவுகள் அதிகரித்துள்ளன எனவும், அதனால், ஈப்போவில் குவாரி தயாரிப்புகளைத் தருவிப்பதால், போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளது எனவும் விளக்கினார்.
எனவே. துறை சார்ந்த ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் நிலையில் மூடப்பட்டக் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும் விவகாரம் குறித்து தாம் ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.








