Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் குடிநுழைவு கடத்தல் கும்பல் முறியடிப்பு - இந்தோனிசியர்கள் உட்பட 14 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் குடிநுழைவு கடத்தல் கும்பல் முறியடிப்பு - இந்தோனிசியர்கள் உட்பட 14 பேர் கைது

Share:

ஜோகூர் மாநிலத்தின் சுங்கை ரெங்கிட் மற்றும் ஃபெல்டா ஏர் தாவார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் குடிநுழைவுக் கடத்தல் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 13 இந்தோனேஷியர்கள் மற்றும் உள்ளூர் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.

உளவுத்துறை அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சுங்கை ரெங்கிட், பெங்கெராங் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போலீசார், அண்டை நாட்டிலிருந்து சமீபத்தில் வந்ததாக நம்பப்படும் 10 இந்தோனேஷிய ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர்.

அவர்களிடம் மலேசியாவில் தங்குவதற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் எதுவும் இல்லையென விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News