Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 22.66 பில்லியன் ரிங்கிட்டாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆனந்த கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 22.66 பில்லியன் ரிங்கிட்டாகும்

கோலாலம்பூர், நவ. 28-


இன்று தமது 86 ஆவது வயதில் காலமான மலேசிய கோடீஸ்வரன் டான்ஸ்ரீ ஆனந்தி கிருஷ்ணனின் சொத்து மதிப்பு 5.1 பில்லியன் டாலர் அல்லது 22.66 பில்லியன் ரிங்கிட்டாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உலகில் முன்னணி கோடீஸ்வரர்களின் சொத்து விபரங்கள் பட்டியலை துல்லியமாக வெளியிடும் அமெரிக்காவை தளமாக கொண்ட ஊடகமான Forbes, கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட பட்டியலின்படி மறைந்த ஆனந்தி கிருஷ்ணனின் சொத்து மதிப்பை வெளியிட்டது.

மலேசியாவின் முதலாவது கோடீஸ்வரரான சக்கரை மன்னன் ரோபர்ட் குவாக் மற்றும் ஹோட்டல் சொத்துடமை தொழில் அதிபரான இரண்டாது கோடீஸ்வரர் குயிக் லெங் சானுக்கு அடுத்து மூன்றாவது பெரும் கோடீஸ்வரராக 22.66 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய சொத்துக்களுக்கு அதிபதியாக ஆனந்த கிருஷ்ணன் விளங்குகிறார் என்று அறிவித்து இருந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →