Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பிளஸ் நெடுஞ்சாலையில் விபத்து: 10 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

பிளஸ் நெடுஞ்சாலையில் விபத்து: 10 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்

Share:

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையான பிளஸில் கூலாயிக்கும், செடினாக்கிற்கும் இடையே நிகழ்ந்த பெரும் விபத்தினால் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.23 மணியளவில், ஒரு டிரெய்லரும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், வடக்கு நோக்கிச் செல்லும் அனைத்து பாதைகளும் மூடப்பட்டன.

இதனால் வாகனங்கள் கூலாய் டோல் பிளாசா வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.

இந்த விபத்தில் எரிந்து கொண்டிருக்கும் வாகனத்திலிருந்து ஒருவரை பொதுமக்கள் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related News