இரண்டு சகோதரிகள் தங்கள் கணவன்மார்களுடன் சேர்ந்து போதைப்பொருள் கடத்தியதாக தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
24 வயது சித்தி நோர்சந்ஃபினா சோத்தோர், அவரின் கணவரான 23 வயது அஃபிக் ஐடி, 32 வயது சித்தி நோர்ஃபதிமா சோட்டோர், அவரின் கணவர் 35 வயது முகமட் ரஃப்ஃபி யயா ஆகியோர் மாஜிஸ்திரேட் ஹடயா ஷுஹடா ஷம்சிசிடின் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்த நால்வரும் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் ஜோகூர்பாரு, உலு திராம், தாமான் பெஸ்தாரி என்ற இடத்தில் 27.53 கிலோ எடைகொண்ட கனாபிஸ் வகைப் போதைப்பொருளை கடத்தியதாக 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


