கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
ஒரு மாத கால நாடு தழுவிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கின்னஸ் மலேசியா நிறுவனம், அதன் முதல் சிபிஓஸ் CPOs தலைமை பைண்ட் ( Pint ) அதிகாரிகளை அதிகாரப்பூர்வமாக முடி சூட்டியது. அவர்களில் ஒருவர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அயர்லாந்து தலைநகர் டப்ளினின் சின்னமான கின்னஸ் ஸ்டோர்ஹவுஸுக்கு ஒரு பிரத்யேக பயணத்திற்குத் தயாராக உள்ளார்.

மலேசியாவின் மிகச் சிறந்த வேலையாக இருக்கக்கூடிய பிராண்டின் தரத்தை நிலை நிறுத்தக்கூடிய பணிகளுக்கு கிடைக்கப் பெற்ற நூற்றுக்கணக்கானப் பதிவுகளைக் கின்னஸ் மலேசியா பெற்றது. இவற்றில் பத்து இறுதிப் போட்டியாளர்கள் சிபிஓ, கின்னஸ் தரத் தூதர் பதவிக்கான இறுதிப் போட்டிக்கு வருகை தந்தனர்.
மாபெரும் இறுதிப் போட்டி, கோலாலம்பூர், பெவிலியலில் உள்ள அர்துர்’ஸ் ஸ்டோர்ஹவுஸில் நடைபெற்றது. அங்கு பத்து இறுதிப் போட்டியாளர்கள் தொடர்ச்சியான சவால்களின் மூலம் போராடினர். கின்னஸ் கருப்பொருள் கொண்ட ட்ரிவியா சுற்று முதல், பாயிண்ட் சோதனைகள் வரை கின்னஸ் தூதர்களின் நேரடி கண்காணிப்புடன் நடைபெற்றது.
ஒரு சரியான ஊற்றலை அங்கீகரிக்கக்கூடிய, பிராண்டின் தரத்தை நிலை நிறுத்தக்கூடிய மற்றும் பார்வையிடத் தகுந்த சிறந்த பார்களை ( Bar ) பரிந்துரைக்கக்கூடிய ஒருவரைத் தேர்வு செய்வதே இந்தப் போட்டியின் நோக்கமாகும்.
சுவை இல்லாமல் ஒரு குறைபாடற்ற பைண்டை அடையாளம் காணும் திறன், தூய்மை, குளிர்ச்சி மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட பிராண்டின் கையொப்பமான 7Cs of the Perfect Pour பாயிண்டை நிரூபிக்கும் திறன் மற்றும் அழுத்தத்தின் கீழ் கின்னஸின் புகழ் பெற்ற பாயிண்ட் சடங்கை நிறைவு செய்யும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இறுதிப் போட்டியாளர்கள் மதிப்பிடப்பட்டனர்.

இதில் புதிய கின்னஸ் தரத் தூதர்களாக மூவர் தேர்வு செய்யப்பட்டனர். கோலாலம்பூர், ஆலாம் டாமாயைச் சேர்ந்த சியா புய் குவும், பகாங், கேமரன் மலையைச் சேர்ந்த ஒங் லீ மின் மற்றும் சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த தீபன் அனாட்கான் என்ற ஈகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் கிராண்ட் சிபிஓ ஆக சியா புய் குவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான வெகுமதியை அவர் அனுபவிப்பதோடு கின்னஸ் மலேசியா, அனைத்துச் செலவுகளையும் ஏற்று அவரை, கின்னஸின் தாயகமாகத் திகழும் டப்ளினுக்கு அனுப்பி புகழ் பெற்ற கின்னஸ் ஸ்டோர்ஹவுஸைப் பார்வையிட்டு அதன் மூல பிராண்டின் பாரம்பரியத்தை அனுபவிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதே வேளையில் இறுதிப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மூவரும் தற்போது மலேசியா முழுவதும் பிராண்டின் தராதரங்களை அங்கீகரித்தல், கொண்டாடுதல் மற்றும் நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் பொறுப்பை ஏற்கின்றனர்.








