Oct 16, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் உட்கொண்ட நான்கு அந்நிய நாட்டவர்கள் உட்பட 60 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் உட்கொண்ட நான்கு அந்நிய நாட்டவர்கள் உட்பட 60 பேர் கைது

கோலாலம்பூர், நவ. 29-


நேற்று வியாழக்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள ஒரு முன்னணி கேளிக்கை மையத்தில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் உட்கொண்டிருந்த நான்கு அந்நிய நாட்டுப் பிரஜைகள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அதிகாலை 4.30 மணியளவில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அந்த கேளிக்கை மையத்தில் இருந்த 181 பேரிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 60 பேர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ காவ் கொக் சின் தெரிவித்தார்.

பிடிபட்ட 60 பேரில், 56 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். 20 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையில் 3993.1 கிராம் போதைப்பொருள் கைப்பற்றது. பிடிபட்ட அனைவரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று காவ் கொக் சின் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →