சிரம்பான், அக்டோபர்.13-
நெகிரி செம்பிலான், கோல கிளாவாங்கில் எஸ்பிஎம் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த 17 வயது மாணவி ஒருவர், தனது வீட்டின் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.
மாணவி மரணம் குறித்து, கடந்த சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில், ஜெலெபு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரியிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அம்மாநில போலீஸ் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், அம்மாணவியின் உடலில் எந்த ஒரு காயமோ, சந்தேகத்திற்குரிய ஆதாரங்களோ இல்லை என்றும் அவர் உறுத்திப்படுத்தியுள்ளார்.
எனவே இவ்வழக்கு, திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








