ஷா ஆலாம், நவம்பர்.26-
கடந்த ஆண்டு ஷா ஆலாமில் நடைபெற்ற குடும்பத் தன்முனைப்பு நிகழ்ச்சியில் தனது உடலின் பாகங்களைப் பகிரங்கமாகக் காட்டியதற்காக eHati நிறுவனத்தின் தன்முனைப்புப் பெண் பேச்சாளருக்கு ஷா ஆலாம் ஷரியா உயர் நீதிமன்றம் இன்று 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
49 வயது சித்தி ஸாமா ரிஸால் போஸ் என்ற அந்தப் பெண் பேச்சாளர், அபராதத் தொகையைச் செலுத்தவில்லை என்றால் ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி ஸைனால் அபிடின் குஸ்மின் உத்தரவிட்டார்.
நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை சித்தி ஸாமா செலுத்தினார். அந்தப் பெண் பேச்சாளரின் செயல், சமயத்திற்கு அவப்பெயரைத் தந்துள்ளது என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.








