May 5, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடி குளத்தின் விளிம்பில் தவறி விழுந்த ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மீன் பிடி குளத்தின் விளிம்பில் தவறி விழுந்த ஆடவர் மரணம்

Share:

ஈப்போ, பிப்ரவரி.11-

ஈப்போவில், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, பத்து குராவ் அருகே கம்போங் சுங்கை நங்கா ஜெலாய் பகுதியில், ஆடவர் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, குளத்தின் விளிம்பில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

40 வயதான அவர், குளத்தின் விளிம்பில் நின்று மீன் கொண்டிருந்த போது, தவறி விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பேரா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்த போது, அந்த ஆடவர் சுயநினைவின்றி குளத்தின் விளிம்பில் கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த ஆடவரின் சடலமானது மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News