Jul 29, 2026
Thisaigal NewsYouTube
10 A பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடம் கிடைக்கவில்லை
தற்போதைய செய்திகள்

10 A பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடம் கிடைக்கவில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6-

SPM தேர்வில் 10A பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் சிலருக்கு மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இடம் கிடைக்கவில்லை என்று மசீச. இன்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டத்தில் இடம் கிடைக்காத சிறந்த அடைவு நிலையைப் பெற்ற மாணவர்கள் மேல்முறையீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மேல்முறையீட்டு முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டப்பட்டன. ஆனால். 10 A பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் சிலரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மசீச தலைவர் டாக்டர் வீ கா சியோங் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

SPM தேர்வில் 10 ஏ பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் Matriculation கல்வித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் உத்தரவாதம் அளித்து இருந்தார்.

எனினும் 10 A பெற்ற பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக வீ கா சியோங் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் இந்த முடிவு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்