Jul 2, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை
தற்போதைய செய்திகள்

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

Share:

அரசின் சிக்கன நடவடிக்கைகளை மேலும் பயனுள்ளதாக மாற்ற அனைத்து அமைச்சிலும் “தலைமை சேமிப்பு அதிகாரி” என்ற பதவியை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்லஸ் சந்தியாகோ பரிந்துரைத்துள்ளார்.

அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் வெறும் பொது செலவுகளைக் குறைப்பதில் மட்டும் நின்றுவிடாமல், அரசாங்க நிதி செலவினங்களில் செயல்திறனை உயர்த்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தேவையற்ற செலவுகள், ஒரே பணிகள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது மற்றும் கொள்முதல் முறைகளில் ஏற்படும் கசிவுகளை கண்டறிவதில் தலைமை சேமிப்பு அதிகாரி முக்கிய பங்காற்ற முடியும் என சார்லஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகள் மற்றும் மானிய திட்டங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்