Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அனைத்து எல்ஆர்டி நிலையங்களிலும் பாதுகாப்புக் கதவை பொருத்தும்படி பிரசாரானாவிற்கு உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அனைத்து எல்ஆர்டி நிலையங்களிலும் பாதுகாப்புக் கதவை பொருத்தும்படி பிரசாரானாவிற்கு உத்தரவு

புத்ராஜெயா, ஜூன்.04-

அனைத்து எல்ஆர்டி ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு கதவைப் பொருத்தும்படி பிரசாரானா நிறுவனத்திற்குப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று மாலையில் பூசாட் பண்டார் பூச்சோங் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் தைவான் பிரஜை ஒருவர், ரயிலினால் மோதப்பட்டு உயிரிழந்தது போன்று விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க பாதுகாப்புக் கதவுகள் அவசியமாகின்றன என்று பிரசாரானா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து அமைச்சர் அந்தோணி லோக்கிடம் கேட்ட போது, இச்சம்பவம் குறித்து புலன் விசாரணை செய்யும் பொறுப்பு போலீசாரிடம் விட்டு விடுவதாக குறிப்பிட்டார்.

எனினும், எல்ஆர்டி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் அந்த சம்பவம் பதிவாகியிருக்கிறது. இதனை விபத்தென்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாலை 6 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் எச்ஆர்டி ரயில் இருப்புப் பாதையில் தவறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த தைவான் பிரஜை, ரயிலில் அரைப்பட்டு உயிரிழந்ததாக பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை