ஜார்ஜ்டவுன், அக்டோபர்.08-
கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிமுகமான பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தனியார் துறையைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் ஜார்ஜடவுன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது டேவிட் லாவ் ஹெங் செங் என்ற அந்த பணியாளர் நீதிபதி இர்வான் சுவாயின்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த ஆடவர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி மதியம் 12.15 மணியளவில் பினாங்கு திமோர் லாவுட் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹோட்டல் ஒன்றின் அறையில் 24 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








