ஜோகூர் பாரு, ஜூலை.30-
சூதாட்ட நடவடிக்கை தொடர்புடைய குற்றச்செயலுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனிநபர் ஒருவரிடமிருந்து 6 லட்சத்து 35 ஆயிரம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படும் இரண்டு போலீஸ்காரர்கள் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த இரு போலீஸ்காரர்களும் இன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமட் இஸ்ஹாம் முகமட் அலியாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று பெற்றது.
40 வயது மதிக்கத்தக்க அந்த இரு போலீஸ்காரர்களும் இன்று அதிகாலை 2 மணிக்கு ஜோகூர் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.








