கோலாலம்பூர், நவம்பர்.23-
மலேசியாவில் இன்று மாலை 6.20 மணி நிலவரப்படி, ஆறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 282 பேராக உயர்ந்துள்ளது. சமூக நலத் துறை தகவலின்படி, மொத்தம் 2 ஆயிரத்து 955 குடும்பங்கள் 42 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், கிளந்தான் மாநிலம் 7 ஆயிரத்து 499 பேருடன் அதிகப்படியானப் பாதிப்பைப் பதிவு செய்துள்ளது. தும்பாட், பாச்சோக், கோத்தா பாரு, பாசீர் பூத்தே ஆகிய நான்கு மாவட்டங்களில் 31 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், கெடாவில் 236 பேர், பினாங்கு மாநிலத்தில் 115 பேர், பெர்லிஸில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சரவாக்கிலும் புதிதாக 44 பேர் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.








