இவ்வாண்டு சீனப் புத்தாண்டு மற்றும் ஹரி ராயா பண்டிகைகளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட “ஓப்ஸ் செலாமட்” நடவடிக்கையின் போது மொத்தம் 747 குற்றச்செயல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 111 வழக்குகள் குறைந்துள்ளதாக மலேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதன் விளைவாக குற்றச்செயல் வழக்குகள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இவ்வாண்டு கடுமையான சாலை விபத்துகள் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதையும் காலித் இஸ்மாயில் சுட்டிக் காட்டியுள்ளார்.
சாலை பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் கூட, இன்னும் சில சவால்கள் நீடித்து வருவதை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








