கோலாலம்பூர், ஆகஸ்ட்.23-
கோலாலம்பூர் ரயில் நிலையத்தில் மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் தென் பகுதி வழித்தடத்திற்கான ETS3 மின்சார ரயில் சேவையை மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
காலை 7.45 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்த மாமன்னரைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் அரசாங்க தலைமை செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்கார் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
ETS3 சிறப்பு ரயில் சேவை துவக்க விழாவைத் தொடர்ந்து, ஜோகூரில் உள்ள குளுவாங்கிற்குப் பயணம் செய்வதற்காக, மணிக்கு 140 கிமீ வேகத்தில் இயக்கக்கூடிய ETS3 ரயிலின் கட்டுப்பாடுகளை சுல்தான் இப்ராஹிம் தனிப்பட்ட முறையில் கேட்டு அறிந்து கொண்டார்.
மூன்றரை மணி நேர பயணத்தைக் கொண்ட ETS3 ரயில் சேவையில் ரயில் ஜோகூர், குளுவாங்கை அடைந்த பிறகு, மாமன்னர் கெமாஸ் -ஜோகூர் பாரு மின்சார இரட்டைப் பாதைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2.8 கி.மீ பொது பூங்காவான மாஹ்கோத்தா ரெயில் பார்க்கைத் திறந்து வைத்தார்.








