நாட்டில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ள அரசாங்க மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த மருத்துவர்கள் விவகாரத்தைக் கையாளுவதற்கு உயர் நிலையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும், நாளை திங்கட்கிழமை நாடு தழுவிய நிலையில் ஒப்பந்த மருத்துவர்கள் மறியல் நடவடிக்கையில் குதிப்பது உறுதியாகியுள்ளது.
நாளை ஏப்ரல் 3 தொடங்கி 5 ஆம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த மறியல் நடவடிக்கையில் சுமார் 10,000 முதல் 13,000 வரையிலான ஒப்பந்த மருத்துவர்கள் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்னையை தீர்ப்பதாக கூறி பல குழுக்கள் அமைக்கப்பட்டன. கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், அவை நடப்பு பிரச்னையின் தீர்வுக்கு உதவவில்லை. இது சுகாதார அமைச்சின் இயலாமையைக் காட்டுகிறது என்று மறியல் நடவடிக்கைக்கு தலைமையேற்றுள்ளவர்களில் ஒருவரான மரத்துவர் டாக்டர் ஜமால் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


