Nov 19, 2025
Thisaigal NewsYouTube
900 க்கு மேற்பட்ட பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

900 க்கு மேற்பட்ட பள்ளிகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன

Share:

நிபோங் திபால், நவம்பர்.19-

நாடு முழுவதும் கல்வி இடைவெளியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட மடானி தத்தெடுப்புப் பள்ளித் திட்டத்தில் 900க்கும் மேற்பட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் மடானி அரசாங்கத்தின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டப் பள்ளிகளுக்கு பெரும் நன்மைகளை வழங்கியுள்ளது என்றும் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் கூறினார்.

இந்த மடானி தத்தெடுப்புப் பள்ளித் திட்டம் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் சிறியதாக இருந்தாலும், கணிசமான நன்மைகளைப் பெற்றுள்ளன. இந்தப் பள்ளிகள் உண்மையிலேயே அதிர்ஷ்டமிக்கவையாகும். காரணம், ஒவ்வொரு பள்ளியிலும் அனைத்து வகுப்புகளும் ICT எனப்படும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. கல்வித் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த இது உதவுகிறது என ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

இன்று பினாங்கு சுங்கை பாக்காப் தேசியத் தொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்த போது செய்தியாளர்களிடம் ஃபாட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.

Related News