2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மா அமல்படுத்தப்பட்ட பிறகு நாட்டில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைந்த விட்டதா? என்று சுவாரம் மலேசியா எனப்படும் மலேசிய மனித உரிமை அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சொஸ்மா சட்டம் அமலுக்கு வந்தப் பின்னர் நாட்டில் குற்றச்செயல்கள் பெருவாரியாக குறைந்து விட்டது என்பது உண்மை என்றால் அது பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று சுவாராம் மின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி தெரிவித்தார்.சொஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்து இருக்கிறத என்று நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய எல்லை பாதுகாப்பு கருத்தரங்கில் போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோ செரி அயோப் கான் இதனை தெரவித்து இருந்தார்.நாட்டிற்கு எதிராக கீழறுப்பு நடவடிக்கை, பொது ஒழுங்கை சீர்குலைப்பது,உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிரட்டலை ஏற்படுத்துவது,சதிநாசச் செயல் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறத என்ற அயோக் கான் தெரவித்து இருந்தார்.








