Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் மறுபடியும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் மறுபடியும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

Share:

நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைமுறை மறுபடியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மசீ.ச கோரிக்கை விடுத்துள்ளது.

ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் பிரதிநிதியாக யார் நியமிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மீண்டும் மக்களிடமே வழங்கப்பட வேண்டும் என்று மசீச பேச்சாளர் மைக் சொங் யெவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது ஊராட்சி மன்றப் பொறுப்பை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்ற போதிலும் அது எடுக்கக்கூடிய முடிவே இறுதியாவும், தீர்க்கமாகவும் இருந்து வருகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை முன்னெடுப்பதற்கு ஊராட்சி மன்ற அளவில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இது பெரும் குறைபாடாக இருந்து வருகிறது என்று மைக் சொங் யெவ் வலியுறுத்தியுள்ளார்.

Related News