முன்னாள் சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹரூண், நிதி அமைச்சின் துணை சார்பு நிறுவனமான அமானா ராயா பெர்ஹாட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இட்ருஸ் ஹரூணின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அமானா ராயா பெர்ஹாட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டத்துறை அலுவலகத்தின் முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞரும், முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியுமான இட்ருஸ் ஹரூண், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது 2020 ஆம் ஆண்டில் சட்டத்துறை தலைவாக நியமிக்கப்பட்டார்.
மூன்று பிரதமர்களின் கீழ் சட்டத்துறை தலைவாக பணியாற்றியவான இட்ருஸ் ஹருண், கடந்த மாதம் தமது சேவைக்கால ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து , தற்போது கோரப்படாத சொத்துகளை தன் வசம் வைத்துள்ள அமானா ராயா பெர்ஹாட் டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.








