Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சக நண்பரை தாக்கினார்: கோவிந்தராஜு மீது மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சக நண்பரை தாக்கினார்: கோவிந்தராஜு மீது மீது குற்றச்சாட்டு

தனது சக நண்பரை அடித்து, கடுங்காயங்கள் விளைவித்ததாக ஒரு இருதய நோயாளியான முதியவர் ஒருவர் மலாக்கா, ஆயர் குரோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

68 வயது கே. கோவிந்தராஜு என்ற அந்த முதியவர், மாஜிஸ்திரேட் நோர் யாலியாத்தி முகமட் சோப்ரிi முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மலாக்கா தெங்கா, தாமான் பெர்த்தாம் ஜெயா, ஜாலான் பெர்த்தாம் ஜெயா 8 இல், தனது சக நண்பரான 62 வயது வி. கோவிந்தராஜுவை கண்மூடித்தனமாக தாக்கி, அவருக்கு கடுங்காயங்களை விளைவித்ததாக கே. கோவிந்தராஜு மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 325 பிரிவின் கீழ் கே. கோவிந்தராஜு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →