Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், நவ.9-


அமலாக்க அதிகாரிகள் மத்தியில் தவறான நடத்தை மற்றும் நம்பத்தன்மைக்கு முரணான செயல்பாடு தொடர்புடைய கடும் விவகாரங்களை கையாளுவதற்கு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று இஏஐசி எனப்படும் அமலாக்க ஏஜென்சிகளின் நம்பக்தன்மையை கண்காணிக்கும் ஆணையம் கூறுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், அரச மலேசிய போலீஸ் படை மற்றும் இதர அரசாங்க அமலாக்க ஏஜென்சிகள் போன்று சட்டப்பிரிவு 700 கீழ் இப்படியொரு சிறப்புப்பணிக்குழுவை அமைக்க முடியும் என்று அந்த ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பாக்கார் தெரிவித்தார்.

அமலாக்க அதிகாரிகள் சம்பந்தப்படக்கூடிய எந்தவொரு குற்றச்செயலாக இருந்தாலும் ஒருங்கிணைந்து கூட்டாக விசாரணை செய்ய முடியும்.

இதன் மூலம் நேர விரயத்தை தவிர்க்க முடியும் என்பதுடன் முறைகேடு மற்றும் பணக்கசிவு நிகழ்வதை தடுக்க இயலும் என்று டாக்டர் இஸ்மாயில் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →