கோலாலம்பூர், ஜூலை.29-
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட துருன் அன்வார் பேரணி, அந்நிய முதலீடுகளைப் பாதிக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எந்தவோர் அசாம்பாவிதமின்றி நடைபெற்ற இந்தப் பேரணி அரசியல் முதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டாலும், அந்நிய முதலீடுகளைப் பொறுத்தவரை எதிர்மறையான தாக்கத்திற்கு வித்திட சாத்தியமில்லை என்று புத்ரா பிசினஸ் ஸ்கூல் வர்த்தகக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் அஹ்மாட் ரஸ்மான் அப்துல் லாதிஃப் தெரிவித்துள்ளார்.








