ஈப்போ, செப்டம்பர்.20-
மாது ஒருவர் தனது 2 மாத ஆண் குழந்தையை அரவணைத்தவாறு உறங்கிக் கொண்டு இருந்த வேளையில் மூச்சுத் திணறலுக்கு ஆளாகிய அந்த சிசு பரிதாபமாக மாண்டது.
இந்தச் சம்பவம் பேராக், பாரோட், கோத்தா செத்தியா, கம்போங் சுங்கை டூவாவில் கடந்த வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் நிகழ்ந்தது. தூக்கம் களைந்து அந்த மாது எழுந்து பார்த்த போது, தனது குழந்தை அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சிக்குள்ளாகினார்.
பின்னர் மருத்துவ அதிகாரிகள் சோதனையிட்ட போது அந்த குழந்தை இறந்து விட்டது என்று உறுதிச் செய்யப்பட்டதாக பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபேஸுல் ஹெல்மி ஹம்ஸா தெரிவித்தார்.
இது குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.








