Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பட்டதாரிகளிடம் போதுமான திறன்கள் இல்லை என்றால் அர்த்தமற்றதாகி விடும்!
தற்போதைய செய்திகள்

பட்டதாரிகளிடம் போதுமான திறன்கள் இல்லை என்றால் அர்த்தமற்றதாகி விடும்!

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 20-

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்துலக ஆய்வுகளில் மலேசியப் பல்கலைக்கழகங்கள் தர வரிசையில் உயர்ந்துள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறக்கூடிய பட்டதாரிகள், போதுமான மென்திறன்களை கொண்டிருக்கவில்லை என்றால் தர வரிசை உயர்வு என்பது அர்த்தமற்றதாகி விடும் என்று மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF, நினைவுறுத்தியுள்ளது.

உள்ளூர் பட்டதாரிகளுக்கும், அவர்கள் சார்ந்த தொழில்துறை வாய்ப்புகளுக்கும் பொருத்தமற்ற சூழலே காணப்படுகிறது. அவர்கள் போதுமான அடிப்படை மென்திறன்களை கொண்டிருக்கவில்லை என்று அந்த சம்மேளனம் கூறுகிறது. .

தர வரிசையில் உயர்ந்திருப்பதாக அறிவிக்கப்படும் உள்ளூர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன.

அத்தகைய பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தப்படுவதற்கு முன், அவர்கள் செயலாற்ற வேண்டிய பல்வேறு கடமைகள், ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்புகள் ஆகியவற்றுக்கு அவர்கள் பொறுத்தமான மென்திறன்களை கொண்டிருக்கிறார்களா? என்பதுதான் பெரும்பாலான நிறுவனங்களின் எதிர்பார்ப்பாகும் என்று அந்த சம்மேளனம் கூறுகிறது.

2021 ஆம் ஆண்டு முதலாளிமார்கள் சம்மேள சம்பள ஆய்வறிக்கையின்படி, மூன்றில் ஒரு பகுதி நிறுவனங்கள், உயர்திறன் கொண்ட குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பல்வேறு கடமைகளை ஆக்கப்பூர்வமாக செய்யக்கூடிய புதிய பட்டதாரிகளை எதிர்பார்க்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது

அதேவேளையில் 29 விழுக்காடு நிறுவனங்கள் பொறுப்புகளை ஏற்று, திறம்பட செயலாற்றக்கூடிய பட்டதாரிகளை எதிர்பார்க்கின்றன. 28.5 நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் தாங்கள் வளர்த்துக்கொண்ட திறன்களுக்கு ஏற்ப பணியை திறம்பட கையாளக்கூடிய பட்டதாரிகளை எதிர்பார்க்கின்றன என்று முதலாளிமார்கள் சம்மேளனத்தின் தலைவர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் தெரிவித்துள்ளார்.

சுருங்கச் சொன்னால், தர வரிசையில் உயர்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மலேசிய பல்கலைக்கழகங்களால் உருவாக்கக்கூடிய பட்டதாரிகளிடம் போதுமான திறன்கள் இல்லையென்றால் தர வரிசை உயர்வு என்பது அர்த்தமற்றதாகி விடும் என்று சையத் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்