இம்மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நிகழவிருக்கும் வட கிழக்குப் பருவமழையின் போது வெள்ளம் ஏற்படும் அபாயப் பகுதிகளாக நாடு முழுவதும் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுத் தற்காப்புப்படை தெரிவித்துள்ளது.
இந்த ஆறாயிரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளம் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மலேசிய பொதுத் தற்காப்புப்படை தயார் நிலையில் இருப்பதாக அதன் நிர்வாகப் பிரிவு இயக்குநர் முஹமாட் ஃபசில் சர்டி கூறினார்.
இவ்வாண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்கள் பொருட்களை இழந்து வரும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அவர்களிடையே வெள்ளம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தாங்கள் அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.








