Aug 7, 2026
Thisaigal NewsYouTube
"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK
தற்போதைய செய்திகள்

"இடையூறு செய்ததால் தான் ராக்கி உயிரிழந்தது" - போலீசாரிடம் விசாரணையை ஒப்படைத்தது MBDK

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-

Port Klang, Taman Teluk Gedung Indah பகுதியில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது வளர்ப்பு நாய் ராக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை கிள்ளான் மாநகர் மன்றமான MBDK போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது.

குடியிருப்பாளர்களின் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில், ராக்கியைப் பிடிக்க முயன்ற போது சிலர் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு செய்ததாக MBDK தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது, நாயைப் பிடிக்க பயன்படுத்திய 'Loop' கருவியை பெண் ஒருவர் கத்தியால் வெட்ட முயன்றதுடன், நாயை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கருவியைப் பாதுகாப்பாக அகற்ற முடியாமல் ராக்கி உயிரிழந்ததாக MBDK விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் வைரலான காணொளியானது அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

#JusticeForRocky என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வரும் நிலையில், கிள்ளான் செலாத்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி