May 22, 2026
Thisaigal NewsYouTube
e- hailing ஓட்டுநர கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

e- hailing ஓட்டுநர கைது செய்யப்பட்டார்

Share:

பெட்டாலிங் ஜெயா, முத்தியாரா டமான்சாரா, MRT நிலையத்திற்கு அருகில் Prasarana Malaysia Berhad- நிறுவனத்திற்கு சொந்தமான உதவி போலீஸ்காரர் ரோந்து கார் மீது பெட்ரோல் வெடிகுண்டை வீசி, தீயிட்டு கொளுத்தியதுடன், அந்த காரை கொளுத்தியது மூலம் நிம்மதி பெருமூச்சு விடுவதாக கூறி , டிக் டாக் காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த *e- hailing மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

இன்று அதிகாலை 1.52 மணிக்கு நடந்த இச்சம்பவம் தொடர்பில் பெறப்பட்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் மதியம் 12 மணியளவில் Flora Damansara-வில் ஒரு வீட்டில் *e- hailing மோட்டார் சைக்கிளோட்டியை போலீசார் கைது செய்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Fakhrudin Hamid தெரிவித்தார்.

26 வயதுடைய அந்த நபர், ரோந்து போலீஸ் காரை எரித்தது மட்டுமின்றி MRT ரயில் நிலையத்தின் அருகில் பஸ் நிறுத்த சுவரை கிறுக்கி சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ரோந்துப் போலீஸ் காரை எரிப்பதற்கு அந்த நபர் பயன்படுத்தப்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக Fakhrudin Hamid குறிப்பிட்டார்.

Related News