கோலாலம்பூர், அக்டோபர்.16-
இந்தியர் உருமாற்றுத் திட்டமான மித்ராவின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆயிரம் ஆலயங்களுக்கு தலா 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கும் தர்மா மடானி திட்டத்திற்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார் என்று மித்ராவிற்கு மீண்டும் தலைமையேற்றுள்ள தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
ஆலயங்களுக்கு 20 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவித் திட்டமானது, அதில் 10 விழுக்காட்டுத் தொகை மட்டுமே ஆலயங்களில் செயலாக்கத்திற்குப் பயன்படுத்தலாம். எஞ்சிய 90 விழுக்காட்டுத் தொகை சமூகம் சார்ந்த ஆலய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.
வழங்கப்படும் 20 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகைக்கான செலவினம் தொடர்புடைய அறிக்கைகளை மித்ராவிற்கு ஆலய நிர்வாகங்கள் திருப்பி அனுப்ப வேண்டும். இதுதான் ஆலயங்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனையாகும். இந்த உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்கி, வரும் நவம்பர் மாதம் வரை திறக்கப்பட்டு இருக்கும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் விளக்கினார்.








