May 22, 2026
Thisaigal NewsYouTube
சகோதரின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த நபர்
தற்போதைய செய்திகள்

சகோதரின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த நபர்

Share:

பியூஃபோர்ட், பிப்ரவரி 27 -

பியூஃபோர்ட், கம்போங் பிலாஜௌ வில் உள்ள வீடொன்று தீயில் எரிந்து பாதிப்படைந்ததை அடுத்து, மாற்றுத்திறனாளியான சகோதரியை தீயிலிருந்து காப்பாற்றுவதற்கு தனது உயிரை பணயம் வைப்பதற்கு ஆடவர் ஒருவர் தயாரானார்.

அந்த நபரின் திடீர் செயல் பல அண்டை வீடுகளை தீயிலிருந்து காப்பாற்றுவதற்கு உதவியதுடன் தனது தங்கையயும் தீயில் சிக்காமல் காப்பாற்றியது.

நேற்று இரவு 8 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 47 வயதுடைய அஸ்மி னுயின் க்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பியூஃபோர்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ள வேளையில் 39 வயதுடைய னோரைடா பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவத்தின் போது அஸ்மி மற்றும் தங்கை னோரைடா ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்த வேளையில் மேலும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றொரு இடத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பியூஃபோர்ட் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் தலைவர் மொஹாமட் ஹஸ்புல்லா னெங்கோக் கூறினார்.

Related News