Oct 29, 2025
Thisaigal NewsYouTube
6 வயது சிறுவன் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவத்தில் Roblox கேம் காரணமாக இருக்கலாம் - ஜோகூர் போலீஸ் தகவல்!
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுவன் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவத்தில் Roblox கேம் காரணமாக இருக்கலாம் - ஜோகூர் போலீஸ் தகவல்!

Share:

ஜோகூர் பாரு, அக்டோபர்.29-

பத்து பஹாட்டில், 6 வயது சிறுவன் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டதற்கு, Roblox என்ற இணைய விளையாட்டு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, பாரிட் ராஜா, கம்போங் பாரிட் நிபா லாவுட்டில் நடந்த இச்சம்பவத்தின் போது, அந்த 6 வயது சிறுவன் கழுத்திலும், உடம்பிலும் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களுடன் காணப்பட்டதாக ஜோகூர் காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாட் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அச்சிறுவனின் 9 வயது சகோதரன் Roblox என்ற இணைய விளையாட்டை அளவுக்கு அதிகமாக விளையாடியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அவரது கைப்பேசியை, அவரது சகோதரர் சேதப்படுத்தி, 1 மில்லியன் விளையாட்டுப் புள்ளிகளை வீணடித்ததால், இச்சம்பவம் நடந்திருக்கக் கூடும் என்றும் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாட் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பாக, அன்றிரவு, 9 வயது சிறுவன் தனது தம்பியைக் கத்தியால் தாக்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News