ஜார்ஜ்டவுன், நவம்பர்.02-
பினாங்கு மாநில பொது போக்குவரத்துக்கு ஒரு மைல் கல்லாக அமையவிருக்கும் எல்ஆர்டி ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள், மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்று முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் அனுதினமும் வாகனப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதற்கு ஒரு நிவாரணம் கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு பினாங்கு மக்களிடம் உண்டு. ஆனால், இந்தத் திட்டத்தை மசீச.வின் முன்னாள் தலைவர்கள், எதிர்க்கட்சி அரசியவாதிகள் மட்டுமே எதிர்த்து வருகின்றனரே தவிர பொதுமக்கள் அல்ல என்று பாகான் எம்.பி.யான லிம் குறிப்பிட்டார்.
எந்தவொரு பினாங்குவாசியும், எல்ஆர்டி ரயில் திட்டத்தை எதிர்த்ததாகத் தாம் கேள்விப்படவில்லை. எதிர்க்கட்சியினர் மட்டுமே இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்று அவர் விளக்கினார்.








