கோலாலம்பூர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கே எல் டவர் சுழலும் உணவகம் தனது சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளது.
Atmosphere 360 எனப்படும் அந்த உணவகம், எதிர்வரும் 4 ஆம் தேதிக்குள் வாடகைக்கு இருக்கும் இடத்தில் இருந்து காலி செய்யப்பட வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கு செயல்பட்டு வரும் உணவகத்தின் உரிமையாளரான Asian Kitchen (M) Sdn Bhd. இன் தலைமைச் செயல்முறை அதிகாரி Ringo Kaw இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியதோடு மிகுந்த அதிர்ச்சியாக இருந்ததாகவும் சொன்னார்.
நேற்று காலை அதிகமான வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது, நீதிமன்ற அதிகாரிகள் அங்கு வந்து உணவகத்தைக் காலி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிமன்ற உத்தவு கொண்ட நோட்டீசை வழங்கினர்.
கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிக அருகில் இருக்கின்ற நிலையில், பலர் முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளனர். வேறு வழி இல்லாமல், அந்த முன்பதிவை இரத்து செய்து அவர்கள் செலுத்தியப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதாக உள்ளது என Ringo Kaw சொன்னார்.
கோலாலம்பூர் கோபுரத்தின் நிர்வாகத்தை Hydroshoppe Sdn Bhd தற்போது எடுத்துக் கொண்டிருந்தாலும், இன்னும் 3 ஆண்டுகள் அங்கு செயல்பட முந்தைய நிர்வாகத்தினர் வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால். இப்போது புதிய நிர்வாகம் இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளனர் என Ringo Kaw சொன்னார்.








